ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை உருவாக்குவதற்கு ஜனாதிபதி செயலணியின் தலைமைப் பதவி பொது பலசேனா அமைச்சின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கியமையானது எனக்கு ஆலோசனை வழங்கவே. தவிர நாட்டுக்கு நீதி வழங்குவதற்காக அல்ல.
இதனை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலில் வைத்தே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நான் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் கட்சித் தலைவர்களின் ஆலோசனை பெற வேண்டுமாயின் எனக்கு தேவையான நண்பர்களை தெரிவு செய்யவும் அவர்களிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சராக அலி சப்ரியை தெரிவு செய்த போதும் இவ்வாறான எதிர்ப்புகள் எழுந்தன என ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீதியமைச்சர் அலி சப்ரியும் ஒரே நாடு ஒரே சட்டம் எண்ணக்கருவை முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி செயலணிக் குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankanews
Leave a comment