” பங்காளிக் கட்சிகளால்தான் மொட்டு கட்சி அரசுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டது. தற்போதைய அரசு , மொட்டு கட்சி அரசா என்ற சந்தேகம்கூட எமக்கு எழுகின்றது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிமீது நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். இதன் அடிப்படையிலேயே நாம் சகோதரர் கட்சிகள் என நம்பியவர்களுக்கும், மொட்டு கட்சி ஆதரவாளர்கள் வாக்களித்தனர். ராஜபக்ச என்ற நாமத்தால்தான் பங்காளிக்கட்சிகள் வென்றன.
ஆனால் குழப்பத்தை விளைவித்துவிட்டு வெளியேறிவிட்டன. தற்போதைய அரசில் சஜித் அணி உறுப்பினர்கள் உள்ளனர். சுயாதீனம் என அறிவித்தவர்களும் இருக்கின்றனர். எனவே, இது மொட்டு கட்சி அரசா என்ற சந்தேகம் எழுகின்றது.
எனினும், நம்பிய மக்களை மொட்டு கட்சி கைவிடாது.” – என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment