11 30
இலங்கைசெய்திகள்

அநுரவுக்கு உயிர் அச்சுறுத்தல் – குண்டு துளைக்காத வாகனத்தில் பயணிப்பதாக தகவல்

Share

அநுரவுக்கு உயிர் அச்சுறுத்தல் – குண்டு துளைக்காத வாகனத்தில் பயணிப்பதாக தகவல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க பயன்படுத்திய வாகனம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற பாதுகாப்பு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் அவர் அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு குண்டு துளைக்காத வாகனத்தையே பயன்படுத்தவதாக தெரியவந்துள்ளது.

எனினும் கொடுக்கப்பட்ட வாகனத்திற்கான எரிபொருள் செலவினை யார் ஏற்பது என்பது தொடர்பில் பல தரப்பினரால் கருத்து வெளியிடப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆனாலும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் போது அரச வாகனங்களுக்கு தேசிய மக்கள் கட்சியின் பணத்தின் மூலம் எரிபொருள் நிரம்புவதாகவும், மக்களின் வரிப்பணம் இதற்காக பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...