11 30
இலங்கைசெய்திகள்

அநுரவுக்கு உயிர் அச்சுறுத்தல் – குண்டு துளைக்காத வாகனத்தில் பயணிப்பதாக தகவல்

Share

அநுரவுக்கு உயிர் அச்சுறுத்தல் – குண்டு துளைக்காத வாகனத்தில் பயணிப்பதாக தகவல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க பயன்படுத்திய வாகனம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற பாதுகாப்பு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் அவர் அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு குண்டு துளைக்காத வாகனத்தையே பயன்படுத்தவதாக தெரியவந்துள்ளது.

எனினும் கொடுக்கப்பட்ட வாகனத்திற்கான எரிபொருள் செலவினை யார் ஏற்பது என்பது தொடர்பில் பல தரப்பினரால் கருத்து வெளியிடப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆனாலும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் போது அரச வாகனங்களுக்கு தேசிய மக்கள் கட்சியின் பணத்தின் மூலம் எரிபொருள் நிரம்புவதாகவும், மக்களின் வரிப்பணம் இதற்காக பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
G7joV9tbwAAL77S
இலங்கைசெய்திகள்

அமெரிக்க உதவியுடன் நிவாரணப் பணிகள் தீவிரம்: C-130J விமானங்கள் கட்டுநாயக்காவை வந்தடைந்தன! 

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J...

images 8 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம்: 21 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது! 

கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ (Kush)...

images 7 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தின் பின் எச்சரிக்கை: பாதணிகளை அணியுங்கள், எலிக்காய்ச்சல் குறித்து அவதானம் – GMOA அறிவுறுத்தல்!

அனர்த்த நிலைமைக்குப் பிறகு வீடுகளுக்கு அருகில் காணப்படும் சகதி மற்றும் கழிவுநீர் உள்ள இடங்களில் செல்லும்போது...

images 6 2
இலங்கைசெய்திகள்

அநுராதபுரம் அனர்த்த நிவாரணம்: நெற்செய்கையைத் தொடர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல் – வீடுகளுக்கு அதிக இழப்பீடு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து இன்று (டிசம்பர் 7)...