6 5
இலங்கைசெய்திகள்

அநுர – விஜேபாலவை கொலை செய்ய திட்டம் : பிரித்தானியாவில் இருந்து கசிந்த தகவல்

Share

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரை தற்கொலை தாக்குதல் அல்லது ஸ்னைப்பர் தாக்குதல்களில் கொலை செய்யக் கூடிய சந்தர்ப்பங்கள் இன்றும் நிலவுவதாக இலங்கை பொலிஸ் துறையை அரசியலிலிருந்து விடுவிக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான இரகசிய விசாரணைகள் நடைபெறுவதாகவும் விசாரணைகளை நடத்தும் அதிகாரிகளுடன் தான் நேரடி தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தம் ஒன்றுக்கு பிரித்தானியாவில் இருந்து வழங்கிய கலந்துரையாடலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விசாரணை தகவல்களை பொது வெளிக்கு தெரியப்படுத்த முடியாதுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளதோடு அன்புக்கும் ஆளாகியுள்ளனர்.

ஆனால் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பெரும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.

நேரடியாக குறிப்பிட முடியாவிட்டாலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நுற்றுக்கு நுறு வீதம் ஆபத்து நெருங்கிவிட்டது.அவரை படுகொலை செய்வதே அவர்களின் நோக்கமாகும்.

இன்னும் ஒரு வருடத்தில் இலங்கை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகப்போகிறது. அதை விரும்பாத சக்திகள் இவர்களை முடித்து விடவே சிந்திப்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...