பணிபெண்ணாக சென்ற மற்றுமொரு இலங்கைப்பெண் கதறல்
என்னை இங்கு (சவூதி) கொடூர சித்திரவதைக்கு உட்படுத்துகின்றனர். இங்கு இருக்க முடியாது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மலையகத் தாயொருவர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சரஸ்வதி புஷ்பராஜ் என்பவரே இந்தக் கோரிக்கையை விடுத்துதாக கூறப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி புஷ்பராஜ் .
கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு உடலில் காயங்கள்
இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். வறுமை காரணமாக இவ்வருடம் ஜுலை 15 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
அங்கு அவர் வேலை செய்யும் வீட்டில், வீட்டுக்காரர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு உடலில் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் தமக்கு உணவுகூட முறையாக வழங்கப்படவில்லை என்று தமது குடும்பத்தாருக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
அதன்பின்னர் தற்போது அவரின் தொலைபேசியும் வீட்டுக்காரர்களால் பறிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கும் பெணின் உறவினர்கள், அவரைச் சவூதிக்கு அனுப்பிய இலங்கையில் உள்ள முகவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அழைப்பை எடுத்தால்கூட அவர்கள் பதிலதிப்பதில்லை என கூறும் உறவினர்கள் , சரஸ்வதி புஷ்பராஜ் நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- breaking news sri lanka
- cricket sri lanka
- Featured
- local news of sri lanka
- news from sri lanka
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news english
- sri lanka news first
- sri lanka news live
- sri lanka news sinhala
- sri lanka news tamil
- sri lanka news tamil today
- sri lanka news today
- sri lanka news today tamil
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news today
- sri lanka trending
- sri lankan news
- Tamil news
- tamil sri lanka news