மேலும் 150,000 பைஸர் நாட்டை வந்தடைவு
மேலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசி தொகுதி இன்று(30) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.
Leave a comment