தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று மாலை 5 மணிக்கு அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தலில் ஈகைச்சுடரினை மாவீரரின் தாயார் ஒருவர் ஏற்றிவைத்தார். பின்னராக தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலும் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
#SriLankaNews
Leave a comment