பசுப் பால் ஒரு லீற்றருக்கு 5 ரூபாய் விலை உயர்வு போதுமானதாக இல்லை என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது, ஒரு லீற்றர் பால் 85 முதல் 90 ரூபாய் விலைக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஒரு லீற்றர் பசுப் பாலுக்காக குறைந்தது 150 ரூபாயாவது வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை நாட்டில் தற்போது அனைத்துப் பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பசுப்பால் லீற்றருக்கு 5 ரூபாய் அதிகரிப்பு போதுமானதாக இல்லை என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment