Getty standard american english 83297359 583fb4d45f9b5851e58d7214 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா உதவும்!

Share

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார்.

இதற்காக அனைத்து கடன் வழங்குனர்களுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சரியான நேரத்தில் பங்கேற்பது மற்றும் சமனான சுமை பகிர்வு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அமெரிக்க திறைசேரி சுட்டிக்காட்டிள்ளது.

இலங்கையின் கடன் வழங்குனர்களிடையே உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை வரவேற்றுள்ள அமெரிக்க திறைசேரி, இது தொடர்பான ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ளது.

நிதி தொடர்பான உத்தரவாதங்களை விரைவுபடுத்துவது என்ற பொதுவான இலக்கிற்காக இலங்கையுடன் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இச்செயன்முறையில் பங்கெடுத்துள்ள பரிஸ் கிளப்பின் ஏனைய உறுப்பினர்களுடனும் அதே இலக்கிற்காக இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவேளை இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அவர்களின் ஏனைய அரச முகவர் அமைப்புக்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் தொடர்ந்து செயற்படுவதாகவும் அமெரிக்க திறைசேரி உறுதியளித்துள்ளது.

மேலும் அமெரிக்காவால் இலங்கை மக்களுக்கென வழங்கப்பட்ட பாடசாலை சிறுவர்களுக்கான போஷாக்கு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான உணவு கூப்பன்கள், உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட உரம் மற்றும் நிதியுதவி தொடர்பிலும் அமெரிக்கா நினைவுகூர்ந்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையின் ஊடாக நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை அமெரிக்க திறைசேரி வரவேற்றுள்ளது.

அமெரிக்க திறைசேரி செயலாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...