பருப்பு, கோதுமை மா உள்ளிட்ட ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (14) முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடுமுழுவதிலும் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் குறித்த 5 பொருட்களையும் புதிய விலைக்கு கொள்வனவு செய்ய முடியும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய ஒரு கிலோ கிராம் பருப்பு 4 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 385 ரூபாயும் 15 ரூபாய் குறைக்கப்பட்டு ஒருகிலோ கிராம் கோதுமைா 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
பூண்டு, பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன் ஆகியவற்றின் விலைகள் முறையே 35, 9 மற்றும் 5 ரூபாய்களால் குறைக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோ பூண்டு 460 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 190 ரூபாய்க்கும், 425 கிராம் நிறையுடன் டின் மீன் 490 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
#SriLankaNews
Leave a comment