புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பில் எவ்விதக் கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லையென முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் நோக்கில் கலந்துரையாடவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“எஸ்.டபில்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க நினைவு தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கம, சுசில் பிரேமஜயந்த மற்றம் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் ஒன்று சேர்ந்தமையை அடுத்து புதிய கூட்டணி தொடர்பாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே குறித்த தகவலை அவர் மறுத்துள்ளார்.
மேலும் புதிய அமைச்சரவையில், ஏதாவது பதவிகளைப் பொறுப்பேற்கும் எண்ணங்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கு, அவ்வாறான நோக்கம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment