விவசாய பண்ணைகள் உயர் தொழில்நுட்பத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன.
விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள 27 விவசாய பண்ணைகளை உயர் தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி மேம்பட்ட நிலைக்கு கொண்டுவருவதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இத் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அஜந்த சில்வா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்துறையை பயன்படுத்தி உலகின் மேம்பட்ட பண்ணைகளின் மட்டத்தில் உள்நாட்டு பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், 2023 ஆம் ஆண்டுக்குள் குறித்த இலக்கை அடைவதே இத் திணைக்களத்தின் நோக்கமாகும் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment