ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு தன்னெழுச்சி போராட்டத்துக்கு ஆதரவு வலுத்துவரும் நிலையில், ஆதிவாசிகளும் போராட்ட களம் வந்துள்ளனர்.
‘கோட்டா கோ கம’ போராட்ட களத்துக்கு நேற்று வருகை தந்த ஆதிவாசிகள், இரவு முழுவதும் அங்கு முகாமிட்டு தங்கிருந்து, ராஜபக்ச அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
தன்னெழுச்சி போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இன்றைய தினமும் பல தரப்பினர் இணைந்து, போராட்டத்துக்கு வலு சேர்த்துள்ளனர். கலைஞர்கள் பலரும் வருகை தந்து, போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை வாழ்த்தி – வழிடத்துவதையும் காணமுடிகின்றது.
#SriLankaNews

