யாழ் போதனா வைத்தியசாலையில் அதிரடி சோதனை
யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களிடமிருந்து அவர்களிடமிருந்து சாராய போத்தல்கள், கள்ளு மற்றும் போதை பாக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களின் பைகள், கைப்பைகள் திடீர்சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பணிப்பாளர் தெரிவிக்கையில்,
மருத்துவமனைக்குள் போதை பொருட்கள் பாவனை இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய மருத்துவமனைக்குள் நுழையும் நோயாளர்கள், மற்றும் நோயாளர்களை பார்வையிடவருவோர் என அனைவரினதும், பொதிகள், கைபைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது 3 சாராயப் போத்தல்கள், போதைப்பாக்கு, வெற்றிலைக்கூறு என்பன மீட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது நோயாளர்களை பராமரிப்பவர்கள் சிலரும் போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போதைப் பொருளுடன் தொடர்புடைய நபர்களின் செயற்பாடுகள் குறித்து எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன,
இதுகுறித்து பொலிஸாருடனும் கலந்துரையாடி வருவதாக தெரிவித்த பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி , நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு சகலரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
- breaking news sri lanka
- cricket sri lanka
- english news
- jaffna
- Jaffna News
- jaffna teaching hospital
- lanka tamil
- news from sri lanka
- news in sri lanka today
- sirasa news
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news today
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- sri lankan news
- Sri Lankan Peoples
- Srilankan Tamil News
- tamil lanka news
- Tamil news
- tamil sri lanka news
- tv news
Leave a comment