sar scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் 680 பாடசாலைகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை

Share

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பஸ் சேவை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தள்ளார்.

கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்கள் உட்பட தரம் 1 – தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களைக் கொண்ட 680 பாடசாலைகள் உள்ளன. அவற்றை உடனடியான ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆசிரியர்களுக்கு சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க பயிற்சியளிப்பதற்கு மாகாண சபை நிதியில் சுகாதாரத் திணைக்களத்தை முன்னெடுக்க என்னால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒட்சி மீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களை பெற்று பாடசாலைகளுக்கும் வழங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.

எனவே அனைத்த ஒழுங்குகளும் முடிவடையும் நிலையில் ஆரம்பப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்மாகாணத்தில் 200 மாணவர்களைக் கொண்ட ஆரம்பப் பாடசாலைகள் எதிர்வரும் ஒக்ரோபர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...