யாழ்ப்பாணம் வேம்படி வீதியிலுள்ள முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் தனியார் பஸ் ஒன்றும் அரச திணைக்களத்துக்குச் சொந்தமான பஜிரோ ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து வந்து கொண்டிருந்த விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான பஜிரோ வேகமாக திரும்ப முயற்சித்த வேளை கச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்துடன் மோதித் தள்ளியுள்ளது.
எனினும் பஸ்ஸில் பயணித்தோர் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விவசாயத் திணைக்களத்துக்கு சொந்தமான பஜிரோ சாரதியின் தலை மற்றும் கை கால்களில் படுகாயம் ஏற்பட்டு யாழ்.போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அதில் பயணித்த 3 விவசாய திணைக்கள அதிகாரிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
#srilanka
Leave a comment