நுவரெலியா- கொட்டகலை பகுதியில் சாரதி பயிற்றுவிப்பு பாடசாலையால் முச்சக்கரவண்டிக்கானபயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் முச்சக்கரவண்டியில்பயணித்த இரு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று (17) மாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையில் இருந்து கொட்டகலை வரை பயிற்சிக்காக பயன்படுத்திய முச்சக்கரவண்டி, கொழும்பு கடுவலையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்றின் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் காரில் மோதுண்ட முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது.
விபத்து தொடர்பில் திம்புள பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment