sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

எல்லை மீறும் ஜனாதிபதி!!! – சஜித் குற்றச்சாட்டு

Share

நாட்டு மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அரசாங்கம் மீறி நாட்டின் பக்கச்சார்பற்ற நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகளையும் அரசியல் சதித்திட்டங்களினூடாக அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொரளை குப்பியாவத்த பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கும், நாட்டின் உயர் நீதிமன்றத்துக்கும், நிதி அமைச்சுக்கும் மற்றும் அரச அச்சகத்துக்கும் கூட இடையூறுகளை ஏற்படுத்தி தேர்தலை சீர்குலைக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து துணைபோகும் விதமாக தேர்தலை சீர்குலைக்கும் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாட்டு மக்கள் முறைமை மாற்றமொன்று வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தாலும், தற்போது முறைமை மாற்றம் ஒன்று நிகழாது ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் திட்டமொன்றே இயங்கி வருவதாக சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல், மொட்டு எம்பிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் முழு பதவிக் காலம் முடியும் வரை பொதுத் தேர்தலுக்கு செல்லாதிருத்தல் என்ற காரணங்களுக்காக மாத்திரமே இந்த ஜனாதிபதி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...