ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதைப் பாக்கை விற்பனை செய்துவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பக்கெட்டுக்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஊரெழுவைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே குற்றச்சாட்டில் சந்தேக நபரின் உறவினர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.
#SriLankaNews
Leave a comment