விளையாட்டுத்துறை
இலங்கைசெய்திகள்

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு புதிய சிக்கல்!! வெளியான தகவல்

Share

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு புதிய சிக்கல்!! வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற 20க்கு20 உலகக் கிண்ணப் போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவாதம் அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஆரம்பமாகும் அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் இது தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் போது விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேள்விகளை எழுப்ப உத்தேசித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுற்றுலாவுக்காக 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அலுவலக அதிகாரிகளுக்காக 67 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

‘ தலைவர் சம்மி சில்வாவுக்கு 11.7 மில்லியன், செயலாளர் மொஹான் டி சில்வாவுக்கு 5.4 மில்லியன் ரூபா, உப தலைவர்கள் ஜயந்த தரமதாச 5.1 மில்லியன் மற்றும் ரவீன் விக்கிரமரத்ன 4. 7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன் உலகக் கோப்பைக்கான விசா வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

32 வீரர்கள் உட்பட 52 பேரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப விளையாட்டு அமைச்சரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாத 35 நபர்களுக்கான வீசா கோரிக்கை கடிதங்கள் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு அனுப்பப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் சம்மி சில்வாவின் மனைவி, மைத்துனர் மற்றும் மாமியார் உட்பட 21 உறவினர்கள் மற்றும் நண்பர்களும் அடங்கியிருந்தாக ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை உப தலைவர் ஜயந்த தர்மதாசவுடன் தொடர்புடைய நடிகை ஷலனி தாரகாவுக்கும் அவுஸ்திரேலியா செல்வதற்கு விசா வழங்குமாறு கோரப்பட்டது.

மேலும், செயற்குழு உறுப்பினர்கள் 8பேரின் மனைவிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேர், இலங்கை கிரிக்கெட் சபையின் ஒன்பது அதிகாரிகள் மற்றும் அவர்களது மனைவிகள் இருவர் மற்றும் மற்றொரு நபர் சார்பாக விசா கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

போட்டியை பார்வையிடச் சென்ற சஞ்சீவ நிசாந்த டி சில்வா நாடு திரும்பவில்லை. அத்துடன் பயணச்சீட்டு கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமையினால், மனித கடத்தல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா, இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...