1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சை மிளகாய்!-

vegetables

நாட்டில் ஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று (03) 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் மிக அதிகமாக உள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மரக்கறிகள் தட்டுப்பாடு காரணமாக விலை அதிகரித்தாலும், வியாபாரிகள் தமது விருப்பத்திற்கு, விலையை அதிகரிப்பதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென சில வர்த்தகர்களும் நுகர்வோரும் வலியுறுத்தியுள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version