இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஜப்பானிய பேராசிரியர் ஒருவரின் பணப்பை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் தரையில் விழுந்ததையடுத்து, அவர் அதனை மறந்து சென்றுள்ளார். இந்நிலையில் விமான நிலைய துப்புரவு பணியாளர் ஒருவரால் அந்த பணப்பை எடுக்கப்பட்டு, உரியவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
60 வயதான ஜப்பானிய பேராசிரியை மத்ருஹுர ஜுன்கோ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள கையடக்க தொலைபேசி நிறுவனமொன்றின் அலுவலகத்திற்கு சென்று இலங்கையில் பயன்படுத்துவதற்காக கையடக்க தொலைபேசி சிம்மொன்றை பெற்றுக் கொள்வதற்காக சென்ற போது அவரது பணப்பை கீழே விழுந்துள்ளது.
விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர், இந்த பணப்பையை எடுத்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.
பணப்பையில் 1,19,390 ரூபாய் இருந்தது மற்றும் பேராசிரியர் பணம் பெற்றதற்கான ரசீது இருந்தது. அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பேராசிரியையை தொடர்பு கொண்டு, விமான நிலையத்திற்கு வந்து பணப்பையை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.
பேராசிரியை விமான நிலையத்திற்கு வந்து, பணப்பையை பெற்று, அதை எடுத்த பெண்ணுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வெகுமதி அளித்து, பாராட்டி, நன்றி தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment