Radhakrishnan.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும்!

Share

“இன, மத சாயமற்ற – மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும். ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“9 ஆம் திகதியென்பது, இலங்கையில் மாற்றங்கள் நிகழும் நாளாக மாறியுள்ளது. மே 9 மஹிந்த பதவி விலகினார். ஜுன் 9 பஸில் பதவியை விட்டு பறந்தார். ஜுலை 9 பதவி விலகும் அறிவிப்பை ஜனாதிபதி கோட்டா விடுத்தார்.

அதுமட்டுமல்ல பௌத்த பிக்குகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஜனாதிபதி , பௌத்த தேரர்களாலும், வாக்களித்த மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் இது முக்கிய திருப்புமுனையாகும்.

மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கின்றது. அந்த பணியை ஊடகங்கள் ஆற்றுகின்றன. ஜனாதிபதி பதவி விலகுவதில் ஊடகங்களின் பங்கும் உள்ளது. நல்ல வேலையை அவை செய்துள்ளன. அப்படி இருக்கையில் போராட்டக்களத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே, தாக்குதல் நடத்தியமை கவலைக்குரிய விடயமாகும்.

மஹிந்த ஆட்சியில் ஊடக அடக்குமுறை தலைவிரித்தாடியது. நியுஸ்பெஸ்ட் ஊடக அதிக அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தது. தற்போதும் அந்நிறுவனத்தின் ஊடகர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு விழுந்த அடியாகும்.

அடுத்து வரும் நாட்களில் அரசியல் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. நாடாளுமன்றமும் அவசரமாக கூடும். ஊழல் அற்ற ஒருவர், அரச தலைவராக வேண்டும். அனைவரும் ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...