நாட்டில் கடந்த 9 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
டிசம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதிவரை 52 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
2022 ஜனவரி முதலாம் திகதி இடம்பெற்ற வீதி விபத்துகளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 02 ஆம் திகதி இடம்பெற்ற விபத்துகளில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 385 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 2 ஆயிரத்து 461 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment