இலங்கைசெய்திகள்பிராந்தியம்

டெங்கு தொற்று! – யாழில் 8 பேர் உயிரிழப்பு

Share
201371 dengue
Share

யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நேற்று (04) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நவம்பர் 4ஆம் திகதி வரையிலான கால பகுதியில் 2774 வரையானோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மாத ரீதியாக பார்க்கின்ற பொழுது ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து மே ஜூன் மாதமளவில் ஒரு அதிகரித்த பரம்பல் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...