இந்தியாவிடமிருந்து, இலங்கை சுமார் 7,000 கோடி ரூபா கடனாக பெற உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் நோக்கத்துக்காக சுமார் 7000 கோடி கடன் இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
குறித்த கடன், உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
இதேவேளை, சீனாவிடம் இருந்து இன்னொரு கடனைப் பெறுவதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். குறித்த கடன் தொகை பிற நாடுகளிடம் பெற்றுள்ள கடன்களை திரும்பி செலுத்தவும், வர்த்தக உறவை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும் – என்றார்.
Leave a comment