தொழிற்சங்கப் போராட்டம் காரணாமக 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ஒரே நாளில் புகையிரதத் திணைக்களத்திற்கு 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பயணிகளையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி இவ்வாறு திடீர் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுப்பது எந்த வகையிலும் நியாயமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்சங்கப் போராட்டம் குறித்து ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் எந்தவிதமான முன் அறிவித்தலையும் வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
#SrilankaNews

