independenceparade
இலங்கைஅரசியல்செய்திகள்

சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள 6,783 முப்படையினர்!

Share

சுதந்திர தின அணிவகுப்பில் இம்முறை 6,783 முப்படையினர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட அனைத்து நாடுகளின் இராஜதந்திரிகள் இம்முறை சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதுடன் அவர்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார்.

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு மாவட்ட செயலக கட்டடத்திலுள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜீ. தர்மதிலக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகளை தெளிவுபடுத்தினர்.

சுதந்திர தின விழாவையொட்டி சமய வழிபாடுகள் அன்றைய தினம் காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளன.

பௌத்த மத நிகழ்வு நாரஹேன்பிட்டியிலுள்ள அபேயராம விஹாரையில் நடைபெறவுள்ளதுடன் முக்கிய அமைச்சர்கள் பலரும் அதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்து சமய மத நிகழ்வுகள் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் எம்.பி. ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முஸ்லிம் சமய மத வழிபாடுகள் கொழும்பு 12 பெரிய பள்ளியில் நடைபெறவுள்ளதுடன் நீதியமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கத்தோலிக்க சமய மத வழிபாடு புஞ்சிபொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அநுரத்த, திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கிறிஸ்தவ வழிபாட்டு நிகழ்வு கொழும்பு 02 இல் உள்ள இரட்சணிய சேனை ஆலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நடைபெறவுள்ளன.

நிகழ்வு நடைபெறும் சுதந்திர சதுக்கத்தையொட்டிய பிரதேசங்கள் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படுவதுடன் நிகழ்வில் பங்குபற்றுவோருக்கான பொது வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர தின நிகழ்வுகளின் முக்கிய அம்சமான முப் படைவீரர்களின் அணிவகுப்பில் இம்முறை 6,783 வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன் ஒத்திகை நேரம் தவிர்ந்த ஏனைய காலங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் வீதிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் தேசிய கீதம் இசைப்பதற்காக 45 பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

விசேட அதிதிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்காக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 7.30 மணிக்கு முன்பதாக அனைவரும் ஆசனத்தில் அமரவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்முறை சுதந்தர தின நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் கடந்த வருடங்களைப் போன்று வீதியில் இரு மருங்குகளிலும் இருந்து நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...