யாழ்ப்பாணம் – வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம், இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
செழுமையான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கு எனும் தொனிப்பொருளுக்கமைய பசுமை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இந்த செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகளை, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்திருந்தார்.
64 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வல்லைவெளிப்பகுதியில், வரவேற்பு வளைவு, நடைபாதை, இளைப்பாறும் பகுதிகள், வாகன தரிப்பிடங்கள், ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
மேலும் இயற்கை ரசனை மையங்கள், சிற்றுண்டி மையங்கள், கழிப்பறை வசதிகள், வல்லைச்சந்தி மேம்படுத்தல் என்பன இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளது.
இன்றைய நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment