யாழில் மேலும் 5 பேர், கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யா.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த (80 வயது) பெண் ஒருவர், நீர்வேலியைச் சேர்ந்த (56 வயது) பெண் ஒருவரும் பலியாகியுள்ளனர்.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் சேர்ந்த (78 வயது) பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
மேலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (99 வயது) பெண் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட வேளை உயிரிழந்த நிலையில் அவரது சடலத்துக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மந்திகை ஆதார வைத்தியசாலையில், கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த (77 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 276ஆக அதிகரித்துள்ளது.
Leave a comment