வவுனியாவில் 5 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இன்று மரணமடைந்தனர்.
குறித்த நபர்களில் இருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் சாவடைந்துள்ளனர்.
ஏனையவர்கள் சுகவீனம் காரணமாக வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.
அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a comment