பத்ராணி ஜயவர்தன
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி!

Share

இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியில் ஒரு பகுதி, இன்று (11) நாட்டை வந்தடையவுள்ளது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டுக்குக் கிடைக்கும் குறித்த தொகை அரிசி, சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் என அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச ஊடாக ஒரு கிலோகிராம் நாட்டரிசி மற்றும் பச்சையரிசி 110 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, புத்தாண்டு காலத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுகின்றன என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பால்மாவுக்கு மாத்திரம் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையவடையக்கூடும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 30
இலங்கைசெய்திகள்

27ஆம் திகதி நள்ளிரவு வரை காலக்கெடு! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்...

15 27
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அடுத்த தலைமை குறித்து ரவூப் ஹக்கீம் வெளிப்படை

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைமையை தீர்மானிப்பது பேராளர் மாநாட்டிலே ஆகும். ஆனால் இதுவரையில் அதற்கான எந்த...

14 29
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் தொடருந்துடன் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சி- பாரதிபுரம் பகுதியில் தொடருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று...

9 29
இலங்கைசெய்திகள்

யாழில் அத்துமீறி சுவீகரிக்கப்பட்ட பொதுக்காணி : சுமந்திரன் நேரடி விஜயம்

யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த...