24 664ed6db29afe
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தேர்தலை இலக்குவைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் நகர்வு

Share

இலங்கையின் தேர்தலை இலக்குவைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் நகர்வு

இலங்கையின் தேர்தல் வெற்றியை மையப்படத்தி புனையப்படுகின்ற ஒருவிடயமாக இந்தியாவில் 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை தோற்றுவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.முஷாரப் குற்றம் சுமத்தியள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட காலமும் ஒரு தேர்தல் காலம். அதேபோன்று இந்தியாவில் 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் காலகட்டம், இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் இடம்பெற்றுவரும் கால கட்டம்.

இலங்கையை பொறுத்தவரை விரைவில் ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஒரு காலகட்டாமாகும். அதனால் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி, புனையப்படுகின்ற ஒருவிடயமாக இது இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எழுகிறது.

இந்திய அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பாக இந்த சபையில் உறுப்பினர் ஒருவர் குறிப்பிடுகையில், முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் இருக்கிறது.

சில காலங்களுக்கு முன்னரும் இது தொடர்பாக சபையில் தெரிவித்திருந்தேன். அதன் பிரகாரம் தற்போது இந்தியாவில் 4முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனால் இலங்கையில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது என மிகவும் கடும் தொனியில் உரையாற்றி இருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களில் ஐ,எஸ்.ஐ.எஸ். இந்த தாக்குதலை நாங்கள்தான நடத்தினோம் என உரிமை கோரினார்கள். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு பல வருடங்கள் கடந்தும் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் இந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எந்த தொடர்பும் இல்லை என இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அனைத்து விசாரணை குழுக்களும் தெரிவித்துள்ளன.

இவ்வாறான பின்னணியில் ஏப்ரல் 21தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியது என்றும் இறந்துதிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் பக்தாதி தான் உயிருடன் இருக்கிறேன் என அறிவித்தார் என சொல்லப்பட்ட விடயங்களுக்கு பின்னால் தேசிய, சர்வதேச பெரும் சதி இருப்பதை எமது நாட்டு மக்கள் இப்போது புரிந்திருக்கின்ற சூழலில்தான், இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களின் சம்பவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுடன் தொடர்புபடுத்தி, இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் மேலும் தலைதூக்கப்போகிறது என்ற போர்வையில் தற்போது சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அன்றும் இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்கள். தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலுக்கு இந்தியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு பல்வேறுபட்ட சம்பவங்கள் கருத்துக்கள் இருக்கின்ற நிலையில், புதிதாக வந்திருக்கும் இந்த செய்தி குறித்து நாட்டில் இருக்கின்றன சிங்கள,தமிழ்.முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். ” என்றார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...