எரிபொருள் விநியோகத்துக்கு இன்று முதல் வரையறை அமுலாக்கப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த வரையறைக்கு அமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
இதேவேளை,, கார் மற்றும் வான் ஆகியனவற்றுக்கு 10,000 ரூபாவுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும்.
பேருந்துகள் மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இந்த வரையறைகள் இல்லை எனவும் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment