அரச வைத்தியசாலைகளில் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியாலய அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் மன்னார், திருகோணமலை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதனால் அரச வைத்தியசாலைகளின் சேவைகள் தொழிற்சங்க நடவடிக்கையால் பாதிக்கப்படும்.
இதன்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரான வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவிக்கையில் , இதனால் எவ்வித சேவைகளும் பாதிக்கப்பட மாட்டாது.
இடமாற்றம் செய்யும் சபையின் அனுமதியின்றி பயிற்சிக்கு பின்னரான வைத்தியர்களை பணியமர்த்தியமைக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம்.
Leave a comment