ranil wickremesinghe 759fff
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடமிருந்து 23 இலட்சம் விண்ணப்பங்கள்!

Share

“எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு இன்று (12) வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அவற்றுள் 624, 714 விண்ணப்பங்கள் இன்று (12) வரை தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 341 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள நலன்புரி உதவித் தகவல் அலகுகள் மூலம் அனைத்து விண்ணப்பங்களும் உடனடியாக இத்தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்படும்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான முன்னோடி திட்டம் அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்றதுடன், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

39 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் நலன்புரி உதவிகளைப் பெறவுள்ளன. 06 கட்டங்களின் கீழ் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையின் போதே, இரண்டாம் கட்டப் பணிகளும் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்த கட்டமாக வீட்டு அலகுகளுக்குச் சென்று தரவுகளை சேகரிக்கவுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள், என்ற அடிப்படையில் ஏற்கனவே நலன்புரி உதவிகள் பெற்று வருபவர்களும் புதிதாக நலத்திட்ட உதவிகள் பெற விரும்புவோரும் இதில் பதிவு செய்ய வேண்டும்.

அதற்காக, பதிவு செய்வதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்கள் 30.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளதோடு, 29.09.2022 வரை, தரவுக் கட்டமைப்பில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது.

எனினும் அண்மையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரப் பணிகள் காரணமாக 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிடும் நலன்புரி நன்மைகள் சபை, விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி ஒக்டோபர் 15 எனவும் நினைவு கூர்ந்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் டிசம்பர் 15ஆம் திகதி பிரதேச செயலக மட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...