சனத் ஜயசூரிய
அரசியல்இலங்கைசெய்திகள்

’20’ இற்கு உடன் முடிவுகட்டுங்கள்! – ஜயசூரிய வலியுறுத்து

Share

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், 20ஆவது திருத்தத்தை நீக்குவது அரசின் நேர்மைத் தன்மையை அறிந்துகொள்ளப் பயன்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசை மேலும் கடுமையாகச் சாடியுள்ள அவர், புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் கடந்த போதிலும் உறுதியான எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எங்கள் மக்கள் இன்னும் வரிசையில் நிற்கின்றார்கள். அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவு செய்து மக்களின் துன்பங்களை மறந்துவிடாதீர்கள்” – என்று சனத் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...