7 58
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

Share

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் –  இலங்கை வர்த்தக சங்கம் (Sri Lanka Japan Business Council) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் சுமார் 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு உரிய நிலையில் உள்ள வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க (Jagath Ramanayake) தெரிவித்துள்ளார்.

இதன்படி, டொயோட்டா அக்வா, டொயோட்டா எக்ஸ்சியோ, டொயோட்டா பிரீமியோ, டொயோட்டா பியஸ் மற்றும் டொயோட்டா எலியோன், டொயோட்டா விட்ஸ் ஆகிய வாகனங்களை இந்த முறைமையின் கீழ் இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வகை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ள போதிலும் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் வாகன இறக்குமதியாளர்கள் உள்ளனர்.

இதேவேளை, தனியார் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...