15 12
இலங்கைசெய்திகள்

அநுர குமாரவின் இந்திய விஜயம்! சாதகமான செய்திகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

Share

அநுர குமாரவின் இந்திய விஜயம்! சாதகமான செய்திகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு பல சாதகமான செய்திகள் கிடைக்கும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா பயணமாகவுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதியின் குறித்த பயணம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ஒரு நாடாக, இலங்கைக்கு மிகவும் வலுவான வெளிநாட்டு உறவுகள் தேவை, மேலும் மிகவும் வலுவான இராஜதந்திர சேவையும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், தமது அரசாங்கம் மிகவும் வலுவான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில், ஒரு நாடாக, இலங்கையிடம் இதே போன்ற விடயம் இருக்கவில்லை, பெரும்பாலான ஆட்சியாளர்கள் வெளிநாட்டு இராஜதந்திர சேவையையும் அதே போல் தேசம் சார்ந்ததாகவோ அல்லது நாட்டை நோக்கியதாகவோ கருதப்பட்ட வெளியுறவுக் கொள்கையையே கொண்டிருந்தனர்.

இந்தியா மிக நெருக்கமான அண்டை நாடாகவும், மிகவும் வலுவான அண்டை நாடாகவும், நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு எந்த நிபந்தனையுமின்றி உதவிய நாடாக இருப்பதால், இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண வேண்டும். மேலும், இலங்கை மிகவும் வலுவான, அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பை நாம் கருத்தில் கொள்ள வேண்டும், மிகவும் வலுவான நாடாக இருப்பதால், அவர்கள் அதில் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாவுக்கானதாகும். இதன்போது கையெழுத்திட வேண்டிய பல ஒப்பந்தங்கள் நிலுவையில் உள்ளன. இன்னும் பல ஒப்பந்தங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு எல்லாவற்றையும் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது.

எனினும் ஜனாதிபதியின் இந்தியப் பயணத்திற்குப் பிறகு நாட்டுக்கு பல சாதகமான செய்திகள் கிடைக்கும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....