1 33
இலங்கைசெய்திகள்

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் சொத்து : மறுக்கும் நாமல்

Share

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் சொத்து : மறுக்கும் நாமல்

உகாண்டாவில் நிதி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பரப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை என்னால் பொறுப்புடன் கூற முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான எதிர்கால திட்டம் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கித்தியஸ்தர்கள் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த கலந்துரையாடலின் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏனைய கட்சிகளை போல எங்களது கட்சி பிளவுப்படாது மொட்டு கட்சி புத்துணர்வு பெற்றுள்ளதாக என்னால் கூற முடியும்.

இன்னு புதிய மொட்டு கட்சி உள்ளது, அன்று இருந்த மொட்டு கட்சி இல்லை, சிறந்த அணி உள்ளது அத்தோடு நவீன தலைமுறையுடன் முன்னோக்கி செல்ல முடியும் என்ற நம்பிக்கை என்னிடமுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாமல் ராஜபக்சவைவை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ப்ளஸ் வன் என்ற அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி (Vinsatha Yasasmini) விடுத்துள்ளார்.

பொது நிதிகள் கொள்ளையிடப்பட்டு உகாண்டா மற்றும் சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்த கூற்றுக்களின் காணொளி காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நாமல் ராஜபக்ச, அவற்றை நிருபித்து காட்டுமாறு சவால் விடுத்திருந்தார்.

இந்தநிலையில், நாமல் ராஜபக்ச டுவிட்டரில் சவால் விடுத்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வின்சத யஸஸ்மினி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...