20 9
இலங்கைசெய்திகள்

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு!

Share

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயினால் தொடர்ந்தும் மேல் மாகாணத்தில் வசிப்பவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த மாகாணத்தில் 17,159 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஸ் என்னும் நுளம்பினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வீட்டின் சுற்றுசூழலில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் இந்த டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, மூட்டு வலி, அதீத களைப்பு, உடல் வலி, பசியின்மை மற்றும் உடல் அரிப்பு போன்ற டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....