27 4
இலங்கைசெய்திகள்

அஜித் நிவாட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

அஜித் நிவாட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்றைய தினம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு கிரேக்க பொருளாதாரம் கடும் நெருக்கடியான நிலையை சந்தித்திருந்த நிலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான பணத்தை கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்தமை காரணமாக நாட்டுக்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிக அளவில் நட்டம் ஏற்படுத்தியதாக இந்த நான்கு பேருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தலா 10 மில்லியன் பெறுமதியான சரீர பிணைகளின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்த சந்தேக நபர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதித்துள்ளதுடன் தங்களது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் நீதிமன்றின் அனுமதியுடன் பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் பாரிய அளவு நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக அஜித் நிவாட் கப்ரால் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...