33 8
இலங்கைசெய்திகள்

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் புதிய சிக்கல்

Share

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் புதிய சிக்கல்

பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை (தரவு சேகரிப்பு) வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இடமாற்றம் பெற்ற அதிகாரிகள் பரீட்சை திணைக்களத்தில் 10 தொடக்கம் 15 வருடங்கள் பணிபுரிந்த அனுபவமிக்கவர்கள் எனவும், இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் என பொது நிர்வாக அமைச்சிடம் கோரிய போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவர்களுக்கு பதிலாக வந்த புதிய அதிகாரிகள் சில விடயங்களை கற்றுக்கொள்ள சில நாட்கள் ஆகும் என்றும் அதுவரை பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப சேவைகள் விஸ்தரிப்பதாலேயே இவ்வாறு நடந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் பரீட்சை திணைக்களத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமலிருக்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அனுமதியின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பணியிடங்களில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
chathuranga
செய்திகள்இலங்கை

எச்சரிக்கை: பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர்...

bd574480 c5f1 4210 b99d cb00ee6721ce 1170x780 1
செய்திகள்உலகம்

-30° C கடும் குளிரிலும் உறைந்த மினசோட்டா: 80 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் ஒரு மாபெரும் பொது வேலைநிறுத்தம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில், கடந்த 23 ஆம் திகதி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது...

109807728 duglasdevanantha 3
செய்திகள்அரசியல்இலங்கை

அரசு எதையும் தாம்பாளத் தட்டில் தந்துவிடாது; பேசிப் பெற பலமான ஆணை வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

தேசிய மாநாட்டை நடத்தி கட்சியை மீண்டும் எழுச்சிபெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என ஈழ...

police special task force stf sri lanka
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க அருட்தந்தை மீது கொடூரத் தாக்குதல்: 8 காவல்துறை அதிகாரிகள் அதிரடி கைது மற்றும் பணி இடைநீக்கம்!

உந்துருளியில் பயணித்த கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின்...