24 666d1124f0e5f
இலங்கைசெய்திகள்

இங்கிருந்து சிலர் சென்றால் அங்கிருந்து பலர் வருவார்கள் : சஜித்

Share

இங்கிருந்து சிலர் சென்றால் அங்கிருந்து பலர் வருவார்கள் : சஜித்

ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் சென்றால் அங்கிருந்து பலர் எம்முடன் வந்து இணைய இருக்கின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவின் (Rajitha Senaratne) நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உங்களுடன் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வேறு கட்சியுடன் இணைந்து விட்டாரா? என்று சஜித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ‘அப்படி எதுவும் எனக்குத் தெரியாது.

என்னை விடவும் உங்களுக்குச் சிறந்த புலனாய்வாளர்கள் இருக்கின்றார்கள் அல்லவா? அவர்களிடம் இது தொடர்பில் வினவுங்கள்.

ஆனாலும், இங்கு நான் ஒரு விடயத்தைக் கூறி வைக்க விரும்புகின்றேன். அதாவது எம்முடன் இருந்து அங்கு செல்லும் சில பேருக்கு அப்பால் அங்கிருந்து பலர் எம்முடன் இணைய இருக்கின்றார்கள்.

அங்கு யார் யார் இணைந்தார்கள் என்பதைப் பார்த்தீர்கள் அல்லவா? எனவே, தெரியாத விடயங்கள் தொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறிப் பலனில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...