24 66497b05114f8 1
இலங்கைசெய்திகள்

தமிழர் நினைவேந்தலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க காங்கிரஸ்

Share

தமிழர் நினைவேந்தலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க காங்கிரஸ்

தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு தாம் ஆதரவளிப்பதாக அமெரிக்க காங்கிரஸ் (US Congress) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சம்மர் லீ (Summer Lee) குறிப்பிடுகையில்,

“2009ஆம் ஆண்டு ஆயுதப் போரின் இறுதிக்கட்டத்தின் போது, அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவு கூர்வதில், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் தாம் இணைகின்றோம்” என கூறியுள்ளார்.

மேலும், குறித்த தீர்மானத்துடன் இணங்கியுள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ரோஸ் (Deborah Ross), தமிழர்களின் இந்த துயரத்தை நினைவுகூரவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களுடன் இணைவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்புக்கு அமெரிக்கா ஆதரவு தர வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடத்திய இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க காங்கிரஸில் ஒரு முக்கிய தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் பிரதிநிதி வைலி நிக்கல் (Wiley Nickel) 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தழிர்களுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...