T2WEHW2MONMHBBBKV2777SU7DU scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சுட்டுக்கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பேச்சு

Share

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சுட்டுக்கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பேச்சு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக்கொல்ல வேண்டிய நேரம் இது தான் என்று கேரள காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் சர்ச்சையாக பேசியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு திருப்பி கொடுப்பதாக நினைத்து நடைபெற்று வரும் போரில் இதுவரை 12,000 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.

எந்த நாடுகள் கூறினாலும், ஐ.நாவின் போர் நிறுத்த கோரிக்கைகளையும் கேட்காமல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் படையினரை முழுவதுமாக ஒழிக்கும் வரை போர் நடைபெறும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருந்தார்.

இந்த போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் இஸ்ரேலை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போராட்டங்களும், பேரணியும் நடத்தி வருகின்றனர். முக்கியமாக, பாலஸ்தீன மக்களுக்கு கேரளாவில் அதிகமான ஆதரவு உள்ளது.

அந்தவகையில் கேரளாவில் நடந்த பாலஸ்தீன ஒற்றுமைப் பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் கலந்து கொண்டு பேசுகையில், “இரண்டாம் உலகப் போருக்கு பின்பு, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு நியூரம்பெர்க் என்ற விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது குற்றவாளிகள் விசாரணையின்றி சுட்டுக் கொல்லப்படுவார்கள்.

அதே போல, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றவாளியாகர் நிற்கிறார். அவரை விசாரணையின்றி சுட்டுக்கொல்ல வேண்டிய நேரம் இது தான்” என பேசியுள்ளார். இவர் பேசிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...