24 6621a17cbc52c
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள்

Share

சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள்

நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,000 என்ற போதிலும் தற்போது 29,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை சுமார் பதினெட்டாயிரத்தால் அதிகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் காரணமாக கைதிகள் பலர் மாறி மாறி உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில், ​​

இந்த கடுமையான நிலைக்கு மாற்றாக கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள சில கைதிகள் ஹொரணை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பூசா கைதிகள் பல்லசேன முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் சுமார் 670 கைதிகளை அடைத்து வைக்க முடியும் எனவும், தற்போது 2000க்கும் அதிகமான கைதிகள் அங்கு இருப்பதாகவும் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் 300 கைதிகள் இருக்க முடியும் ஆனால் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். மஹர சிறைச்சாலைகளில் 670 கைதிகளுக்கான வசதிகள் இருந்த போதிலும் 2500க்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காலி சிறைச்சாலையில் 270 கைதிகள் உள்ள போதிலும் 1100 கைதிகள் இருப்பதாக காலி சிறைச்சாலை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
arrest 1200px 28 08 2024 1000x600 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூ. 8 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு மதுபானம்: 69 போத்தல்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது!

எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து,...

bb70ef27 25f3 4d2d aac2
உலகம்செய்திகள்

மசகு எண்ணெய் கடத்தல்: ஈரானுக்கு உதவிய வெனிசுலா கப்பல் நிறுவனம், 6 கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய தடை!

கரீபியன் கடற்பகுதி வழியாக ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்திச் செல்ல உதவியதாக வெனிசுலா மீது குற்றம்...

National Strategy child sexual abuse
உலகம்செய்திகள்

இலங்கைப் பிரஜை மீதான சிறுமி கடத்தல், துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள்: மேற்கு லண்டன் நீதிமன்றில் மறுப்பு!

மேற்கு லண்டனில் உள்ள அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 20...

articles2FxGu0xvsmkR7xnWvm5gj0
செய்திகள்விளையாட்டு

மறுநாள் ஜோன் சினாவின் கடைசி WWE போட்டி: குந்தரை எதிர்கொள்கிறார் ஜாம்பவான்!

மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, தனது புகழ்பெற்ற இரண்டு...