24 6619fcded616b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் தகவல்

Share

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் தகவல்

யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் சென்னை (Chennai) இடையிலான விமான சேவையை இன்டிகோ (Indigo) நிறுவனம் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (Airport and Aviation Services (Sri Lanka) Ltd) (AASL) இன்டிகோ (Indigo) விமான சேவையுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன்படி, இண்டிகோ ஜுன் 1, 2024 முதல் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே தினசரி விமானச் செயல்பாடுகளுடன் நேரடி விமானச் சேவையைத் தொடங்கும்.

இந்த இணைப்பு வட மாகாணத்தில் பயணம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும், இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் மத பிணைப்புகளை வலுப்படுத்தும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (AASL) தலைவர் அதுல கல்கெட்டிய (Athula Galketiya,) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு – மும்பைக்கான நேரடி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் நேற்று (12) ஆரம்பித்திருந்தது.

இதன்படி செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் விமான சேவைகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...