24 6608c6dd936eb
இலங்கைசெய்திகள்

ஆடை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

Share

ஆடை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களின் இறக்குமதிக்காக 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், ஆடை மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கான பாகங்கள் இறக்குமதிக்காக 383.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை துணைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 87.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 22.7 சதவீதம் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மட்டும் ஆடை மற்றும் ஆடை உபகரணங்களை இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட தொகை 246.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள புத்தாண்டு காரணமாக இவ்வாறு ஆடை இறக்குமதி அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...

சேனக்க பல்லேதென்ன
இலங்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக இன்று முதல் அமுலுக்கு...